Department of Tamil

Tamil

Event

தென் குமரி கல்வி கழகத்தால், சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் 1984 - ம் ஆண்டு தமிழ்த்துறை ஆரம்பிக்கப்பட்டது. அப்பொழுது திரு. K. அன்னக்குஞ்சுரன் அவர்கள் தமிழ்த்துறை தலைவராகவும், திரு. S. தாமோதரன் மற்றும் திருமதி. C. வசந்தகுமாரி ஆகியோர் பேராசிரியர்களாகவும் பணியாற்றி வந்தனர். அதன் பின்னர் திருமதி. A. அன்னக்கிளி(1993), திரு. R. வைகுண்டமணி(1994), முனைவர். K. அழகேசன்(1999) ஆகியோரும் பேராசிரியர்களாக பணியாற்றி வந்தனர். 2007- ம் ஆண்டு தமிழ் முதுகலை பட்ட படிப்பு தொடங்கப்பட்டது. அதனால் முனைவர் A. அருணர், முனைவர் M. மஹாலட்சுமி, திரு. K. நாராயணன் ஆகிய பேராசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். 2013-ம் வருடம் தமிழ் இளம் முனைவர் பட்ட ஆய்வு படிப்பு தொடங்கப்பட்டது. தமிழ்த்துறை சார்பாக கல்லூரியில் ஆண்டுதோறும் பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் தமிழ்த்துறை மாணவர்கள் சிறப்பிடத்தை பெற்று வருகின்றனர். மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் நடைபெறும் போட்டிகளுக்கு மாணவ மாணவியர்கள் பங்கெடுத்து பரிசுகள் பெற்று வருகின்றனர். மாணவர்களின் தனித்திறமையையை மேம்படுத்துவதற்கு தமிழ்ப்பெரு மன்றமும் இயங்கி வருகின்றது.

தற்போதைய தமிழ்த்துறை தலைவர் திரு. R. வைகுண்டமணி அவர்கள் பல்வேறு இடங்களில் சமய சொற்பொழிவாற்றி வருகிறார். அகில இந்திய வானொலியிலும் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றியுள்ளார். முனைவர் K. அழகேசன் அவர்கள் 52 ஆய்வு கட்டுரைகளையும் 2 நூற்களையும் வெளியிட்டுள்ளார். இவரின் மேற்பார்வையில் 4 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவரும் அகில இந்திய வானொலி நிலையத்தில் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி வந்துள்ளார். முனைவர் A. அருணா அவர்கள் 40 ஆய்வு கட்டுரைகளையும் ஒரு நூலையும் வெளியுட்டுள்ளார். இவரின் மேற்பார்வையில் ஒரு மாணவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவரும் அகில இந்திய வானொலியிலும் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றியுள்ளார். முனைவர் M . மஹாலட்சுமி அவர்கள் 20 ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவரும் அகில இந்திய வானொலியிலும் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றியுள்ளார். திரு K. நாராயணன் அவர்கள் 15 ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.இவர் பல்வேறு இடங்களில் ஆன்மீக பட்டிமன்ற பேச்சாளராக உரையாற்றி வந்துள்ளார். தமிழ்நாட்டு அரசுப்பணிக்கான சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றார்.